அஜித்துடன் துணிவு படத்தில் நடித்த மஞ்சு வாரியர் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவரது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கோலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இவரது நடிப்பில் உருவான துணிவு என்ற திரைப்படம் திரைக்கு வந்தது. வினோத் இயக்கத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
பல ஆண்டுகளுக்குப் பின் அஜித்தும் விஜய்யும் ஒரே நாளில் தங்களது படங்களை களமிறக்கியதால் யார் வெல்லப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்தப் போட்டியில் துணிவு படமே வென்றிருப்பதாக திரையுலகில் பேச்சு எழுந்தது.
We must find time to stop and thank people who make a difference in our lives. Thank you for showing, listening and inspiring. Happy Birthday Sir!
❤️❤️❤️#ajithkumar #AK pic.twitter.com/Uodn4V6J46— Manju Warrier (@ManjuWarrier4) May 1, 2023
இன்று பிறந்த நாளை முன்னிட்டு அஜித்துக்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அஜித்துடன் துணிவு படத்தில் நடித்த மஞ்சு வாரியர் தனது ட்விட்டரில் நடிகர் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், ’நம் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் நபர்களுக்கு நன்றி தெரிவிக்க நேரத்தைக் கண்டறிய வேண்டும். ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி. பிறந்த நாள் வாழ்த்துகள் சார்!’ என தெரிவித்துள்ளார்.