மேகதாது அணை விவகாரம் : முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை..!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. மேகதாதில் அணை கட்டினால் தமிழ் நாட்டிற்கு வரும் காவிரி நீரின் அளவு குறையும் அபாயம் உள்ளது. இதனால் இதற்கு தமிழ் நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது.

காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆகஸ்ட் 3 – ஆம் தேதி கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்படத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.