முக்கியச் செய்திகள் தமிழகம்

மேகதாது விவகாரம்: வரும் 12ம் தேதி அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

மேகதாது அணை விவதாரத்தில் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மேகதாது அணை பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிகளுடனான அலோசனைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

“மேகதாது அணை பிரச்னை தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமரை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். மேலும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் ஒன்றிய அரசிடம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த அணை கட்டுவதால் தமிழ்நாடு விவசாயிகள் நலன் பாதிக்கப்படும் என்றும் மேலும் இது உச்சநீதிமன்றம் தீப்புக்கு எதிராக அமையும் என சமீபத்தில் கர்நாடக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியினரும் இந்த விவகாரத்தில் ஒருமித்த எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணை பிரச்னை குறித்து கலந்து ஆலோசிக்க, முதலமைச்சர் தலைமையில், வரும் ஜுலை மாதம் 12ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள முதலமைச்சர் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டதாக.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஐடியா சொன்னார் சாமியார்: திருப்பதி மலையில் புதையலுக்காக சுரங்கம் தோண்டிய 3 பேர் கைது!

Halley karthi

கொரோனா ஊரடங்கு: கோடீஸ்வரர்கள் சொத்து உயர்வு, லட்சக்கணக்கானோர் வேலையிழப்பு!

Saravana

ஆட்டோவில் சென்று நடிகை கௌதமி பிரச்சாரம்!

Saravana Kumar