காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை நடைபயணத்தில் காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கலந்து கொண்டுள்ளார்.
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் காஷ்மீரில் நிறைவடைகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களைக் கடந்து நடைபயணத்தின் இறுதிப் பகுதியான ஜம்மு காஷ்மீரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
நேற்றைய நடைபயணத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு போதிய அளவு காவல்துறையினர் இல்லாததால் ராகுல் காந்தியின் நடைபயணம் தற்காலிகமாக நிறுதப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி கலந்து கொண்டார். முப்தியுடன் நிறைய பெண்களும் கலந்து கொண்டனர். சுர்சு என்ற இடத்தில் பல தொண்டர்கள் முன்னியிலை இருவரும் நடைபயணத்தை மேற்கொண்டனர். இன்றைய நடைபயணத்தில் பிரியங்கா காந்தியும் கலந்து கொள்ள இருக்கிறார்.








