தமிழ் மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக திகழந்த நடிகை மீரா ஜாஸ்மின், இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.
ரன், சண்டகோழி போன்ற படங்களில், தனது அழகு கொஞ்சும் நடிப்பால், ரசிகர்களை ரசிக்க செய்து, விஜய், அஜித், தனுஷ், மாதவன், விஷால், பிரசாந்த், எஸ்.ஜே.சூர்யா, என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி நடித்து, ரசிகர்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்த மீரா ஜாஸ்மின் பல வருடங்களாக நடிப்பிலிருந்து விலகி இருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், சிறிது இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதுவரையிலும் சமூக வலைத்தள பக்கங்களில் இல்லாமல் இருந்த அவர், தற்போது முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.
பத்தாண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ஜெயராம் உடன் இணைந்து நடிக்கும் மகள் படத்தின் போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் முதல் பதிவாக பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், வாழ்வின் புதிய தொடக்கத்தில் எல்லோருடனும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும், ரசிகர்களுடன் இணைந்திருப்பது, நமது வளர்ச்சிக்கு எந்தளவு முக்கியம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.