உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீன் உடல் பெங்களூரு வந்தது

உக்ரைனில் கொல்லப்பட்ட மருத்துவ மாணவர் நவீன் உடல் பெங்களூரு வந்தடைந்தது. உக்ரைனின் கார்கிவ் நகரில் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற போரின்போது ரஷ்ய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நவீன்…

உக்ரைனில் கொல்லப்பட்ட மருத்துவ மாணவர் நவீன் உடல் பெங்களூரு வந்தடைந்தது.

உக்ரைனின் கார்கிவ் நகரில் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற போரின்போது ரஷ்ய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மருத்துவ மாணவர் உயிரிழந்தார். அங்கு போர் பதற்றம் நீடித்து வந்ததால் அவரது உடலை தாயகம் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், அவரது உடல் உக்ரைனில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. நவீன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

மத்திய வெளியுறவுத்துறை மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் நவீன் சேகரப்பா உடல் விமானம் மூலம் இன்று அதிகாலை பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் மாணவர் நவீன் உடலுக்கு, கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து மாணவர் நவீனின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. இறுதிச் சடங்குகளுக்கு பின்னர் நவீன் உடல், மருத்துவப் படிப்புக்காக மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படும் என்று நவீன் தந்தை சங்கரப்பா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.