புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் தொகுதிவாரியாக சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது புதுச்சேரி எல்லையான கனகசெட்டிக்குளம் பகுதியில் இருந்து தவெக தலைவர் விஜய் ரோட் ஷோ சென்றார். அப்போது விஜய்க்கு வழி நெடுக்கிலும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து புதுச்சேரியில் மக்களை மத்தியில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய்,
“களத்தில் இருப்பவர்களை தான் வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளேன். இங்க இரண்டு கூட்டணி நீங்கள் தனியா வந்து என்ன செய்ய போகிறீர்கள் என கேட்கின்றனர். இங்கு காங்கிரஸ் – திமுக கூட்டணி 5, 6 முறை ஏமாத்திடாங்க. திமுக – காங்கிரசும் பேருக்கு தான் கூட்டணி. சில தொகுதிகளில் ஒருத்தரை ஒருத்தரை எதிர்தது நிற்கின்றனர். அந்த கூட்டணி குழப்ப கூட்டணியாக உள்ளது. என்டிஏ கூட்டணி, சேர்ந்த கூட்டணி இல்ல சோர்ந்து போனா கூட்டணி. இங்கு அரசியல் வியாபாரம் நடக்கிறது. 2 கூட்டணி உள்ள கட்சிகள் மத்தியில் ஆட்சியில் இருந்தன. ஆனால் 2 கட்சிகளும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை கொடுக்க வில்லை என்றார். புதுச்சேரியில் உள்ள இந்த இரண்டு கூட்டமும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.
தீய சக்தி திமுக, காங்கிரஸ் கூட்டணியும் வேண்டாம், பாஜக கூட்டணியும் வேண்டாம். எனவே மக்களோடு மக்களாக இருக்கும் நமது தவெக வேட்பாளர்களுக்கு உங்கள் விஜய்க்கு வாக்களிப்பதாக நினைத்து நமது வேட்பாளர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். தமிழகத்தில் தவெக ஆட்சி அமையும், அதே போல் புதுச்சேரியிலும் தவெக ஆட்சி அமையும் என நம்புவதாக” தெரிவித்துள்ளார்.







