மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பிரத்யேக மருத்துவ காப்பீடு திட்டம்- மத்திய அரசு

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பிரத்யேக மருத்துவ காப்பீடுத் திட்டத்தை செப்டம்பர் முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பிரத்யேக மருத்துவ காப்பீடு திட்டத்தை செப்டம்பர் முதல் மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.…

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பிரத்யேக மருத்துவ காப்பீடுத் திட்டத்தை செப்டம்பர் முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பிரத்யேக மருத்துவ காப்பீடு திட்டத்தை செப்டம்பர் முதல் மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் ஹார்மோன் சிகிச்சை மற்றும் பாலின அறுவை சிகிச்சை போன்றவைகள் உள்ளடங்கும். இது பாராத் பிராதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தின் கீழுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக மத்திய சமூக நீதி அமைச்சகம், தேசிய சுகாதார ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளது. ஒரு வாரத்திற்குள் இந்த திட்டம் அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்கான தேசிய போர்ட்டலால் வழங்கப்பட்ட TG சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையை வைத்திருக்கும் TG நபர்கள் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும். தகுதியுள்ள அனைத்து TG நபர்களுக்கும் அவர்களின் பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

இந்த திட்டம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், பதிவு ஐடி அல்லது தேசிய TG போர்ட்டலில் இருந்து வழங்கப்பட்ட சான்றிதழ் வரிசை எண்ணை வைத்திருக்கும் TG பயனாளி, PMJAY க்கான தற்போதைய நடைமுறையைப் பின்பற்றி, பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள எந்தவொரு மருத்துவமனையிலிருந்தும் சிகிச்சை பெற முடியும். TG சான்றிதழின் சரிபார்ப்பு செயல்முறைக்குப் பிறகு, தகுதியான விண்ணப்பதாரருக்கு சுகாதார அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ், திருநங்ககைகள் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீட்டைப் பெறுவார்கள். மேலும் இதற்கான செலவை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அதன் ‘வாழ்வாதாரம் மற்றும் நிறுவனத்திற்கான விளிம்புநிலை தனிநபர்களுக்கான ஆதரவு (SMILE)’ திட்டத்தின் கீழ் முழுமையாக நிதியளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.