ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வறிக்கையை ஸ்ரீமதி பெற்றோரிடம் அளிக்க நீதிபதி மறுப்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழுவின் நகலை பெற ஸ்ரீமதி தாயார் தரப்பு வழக்கறிஞர் விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். எனினும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையை வழங்க நீதிபதி புஷ்ப ராணி மறுப்பு…

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழுவின் நகலை பெற ஸ்ரீமதி தாயார் தரப்பு வழக்கறிஞர் விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். எனினும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையை வழங்க நீதிபதி புஷ்ப ராணி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் மாணவியின் உடல் இரண்டு முறை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அந்த அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழு ஆய்வு செய்து அறிக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜிப்மர் மருத்துவக் குழுவின் ஆய்வறிக்கையின் நகலை வழங்குமாறு ஸ்ரீமதியின் தாயார் செல்வி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவினை விசாரித்த நீதிபதி புஷ்பராணி இன்று ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையின் நகலை பெற்று கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தார். ஆய்வறிக்கையின் நகலை பெற செல்வியின் வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வருகை புரிந்தார்.

உடற்கூறு ஆய்வறிக்கை இரண்டு மட்டுமே வழங்கபட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையை வழங்க நீதிபதி புஷ்பராணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

29 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரனை வருவதால் அன்றைய தினம் மனு தாக்கல் செய்து பெற போவதாக ஸ்ரீமதியின் தாயார் வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் பேட்டி அளித்தார்.

முதலமைச்சரை சந்திக்க தொழில் துறை அமைச்சர் சி.வி. கனேசன் அனுமதி வாங்கி தருவதாக கூறியுள்ளதால் நடைபயணம் மேற்கொள்வது திட்டம் ரத்து செய்யபடுவதாகவும் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.