எம்.பி.பி.எஸ் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் – உச்சநீதிமன்றம்

நீட் இளநிலைத் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த செப்.12ம் தேதி நாடு முழுவதும் நடந்த மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை 16.14 லட்சம் மாணவர்கள் 202 நகரங்களில் 3,682…

நீட் இளநிலைத் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்.12ம் தேதி நாடு முழுவதும் நடந்த மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை 16.14 லட்சம் மாணவர்கள் 202 நகரங்களில் 3,682 தேர்வு மையங்களில் எழுதினர். இந்நிலையில் தேர்வு எழுதிய இரு மாணவர்களின் வினா தாள்களில் சீரியல் எண் மாறுபட்டிருந்தது.

இந்த குழப்பத்தை எதிர்த்து மாணவர்கள் இருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மாணவர்களின் குழப்பம் தீரும் வரையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தடையை எதிர்த்து தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த மனு மீதான விசாரணை இன்று நாகேஸ்வர ராவ், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.காவே அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதில், இரு தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிரச்னைக்கு தீர்வு காண தேசிய தீர்வு முகமை தயாராக உள்ளது. தவறு நடந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இரு மாணவர்களுக்காக 16 லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க முடியாது என கூறியுள்ளனர்.

இதனையடுத்து மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.