முக்கியச் செய்திகள்

ட்விட்டர் பயன்படுத்த கட்டணமா? – எலான் மஸ்க் அதிரடி

சாதாரண பயனர்களுக்கு ட்விட்டர் இலவசமாகத்தான் இருக்கும். ஆனால், வர்த்தக ரீதியாக பயன்படுத்துவோர், அரசாங்கம் சார்ந்தோருக்கு சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். இதையடுத்து, நாள்தோறும் பல்வேறு அறிவிப்புகளை எலான் மஸ்க் வெளியிட்டு வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், அண்மையில் அவர் பதிவிட்ட பதிவில், ட்விட்டர் சாதாரண பயனர்களுக்கு எப்போதும் இலவசமாகத்தான் இருக்கும். ஆனால், வர்த்தக ரீதியாக அல்லது அரசாங்கம் சார்ந்து ட்விட்டரைப் பயன்படுத்துவோருக்கு சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்தில் இருந்தே ட்விட்டர் தளத்தில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துவந்தார். எடிட் பட்டன், அனைவருக்கும் வெரிஃபிகேஷன், ஓப்பன் அல்காரிதம் என்று பல மாற்றங்கள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். ட்விட்டர் ப்ளூ பிரீயம் சந்தா சேவைக் கட்டணத்தைக் குறைப்பது குறித்தும் பேசியிருந்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற மெட் காலே நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்க், ட்விட்டர் பதிவுகள் எப்படி புரோமோட் மற்றும் டிபுரோமோட் செய்யப்படுகி்ன்றன என்ற மென்பொருள் குரித்து பொதுவெளியில் விமர்சனத்துக்கு விட வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பழிவாங்கிட்டாராம்.. தன்னைக் கடித்த பாம்பை கடித்துக் கொன்ற விவசாயி

Gayathri Venkatesan

இந்தியாவில் புதிதாக 42,645 பேருக்கு கொரோனா: 562 பேர் உயிரிழப்பு

Gayathri Venkatesan

ஜிபிஎஸ் கருவி பொருத்திய பைக் திருட்டு; கண்டுபிடிக்க முடியாதது எதனால்?

Dinesh A