பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக #Mayawati மீண்டும் தேர்வு!

லக்னோவில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மீண்டும் அக்கட்சியின் தலைவராக மாயாவதி தேர்வு செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி (வயது 68) தீவிர…

லக்னோவில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மீண்டும் அக்கட்சியின் தலைவராக மாயாவதி தேர்வு செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி (வயது 68) தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதற்கு அவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த சூழலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் லக்னோவில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், அக்கட்சியின் தேசிய தலைவராக மாயாவதி  மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாயாவதி உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக 4 முறை பதவி வகித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்சி ராம் 20 ஆண்டுகளுக்கு முன்பே இவரை அரசியல் வாரியாக அறிவித்தார். கடந்த 2003 முதல் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவராக மாயாவதி பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.