நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார.
அந்த பதிவில், “ஈத்-உல்-பித்ர் நல்வாழ்த்துகள். இந்நாள் எங்கும் சகோதரத்துவத்தையும் கருணையையும் மேலும் வளர்க்கட்டும். அனைவரும் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் திகழட்டும். ஈத் முபாரக்!”
இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார்.







