மத்திகிரி கால்நடை பண்ணையில் அமைச்சர் எல்.முருகன் ஆய்வு

ஆசியாவின் பெரிய கால்நடை பண்ணையில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர்  எல்.முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஓசூர் அருகே உள்ள மத்திகிரி எனும் இடத்தில் ஆசியாவின் பெரிய கால்நடை பண்ணை…

ஆசியாவின் பெரிய கால்நடை பண்ணையில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர்  எல்.முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஓசூர் அருகே உள்ள மத்திகிரி எனும் இடத்தில் ஆசியாவின் பெரிய கால்நடை பண்ணை
சுமார் 1,200 ஏக்கரில் அமைந்துள்ளது. இதனை மத்திய தகவல் ஒலிபரப்பு, கால்நடை,
பால்வளம், இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் பார்வையிட்டார். மரக்கன்றுகளை நட்ட அமைச்சர் பண்ணையில் உள்ள கால்நடைகள், அதற்கான உணவு பயிர்கள், மருத்துவர்கள், வேலையாட்கள் உள்ளிட்டோரிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், காங்கேயம் வகை காளைகள் மற்றும் உயர் வகை காளைகள் வளர்க்கும் மையத்தைப் பார்வையிட்டு அங்குள்ள கால்நடைகள் வளர்ப்பு முறைகள், இனப்பெருக்கம், விந்து உற்பத்தி, உறை விந்து வங்கி, மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் குளிர் பதன சேமிப்பு ஆகிய மையங்களைப் பார்வையிட்டு அதுகுறித்து கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், எட்டு ஆண்டு சாதனைகள் குறித்து இந்தியா முழுவதுமே சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பயனாளிகளுக்கு இடைத்தரகர்கள் இன்றி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வழியாக அரசாங்கத்தினுடைய திட்டங்கள் சென்று சேர்ந்திருக்கிறது. சாதாரண குடும்பத்தைச்
சார்ந்தவர்கள்  அரசாங்கத்தினுடைய திட்டங்கள், மானியங்களை நேரடியாகப் பெறும் வகையில் ஜன் தன் கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6,000 ரூபாய் விவசாய சன்மானம் நிதி கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

கொரோனோ நேரத்தில் 500 ரூபாய் நம்முடைய தாய்மார்களுக்கு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இலவச எரிவாயு அடுப்பு, சுகாதாரமான குடிநீர், கழிப்பிடங்கள், தூய்மை இந்தியா, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயிஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். நாட்டில் கப்பல் போக்குவரத்து ஆகட்டும் அல்லது வான்வெளி ஆகட்டும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மீன்வளத் துறையில் முதல்முறையாக 2014க்கு பிறகுதான் ஒரு தனி அமைச்சகமே கொடுக்கப்பட்டது.

சென்னை காசிமேடு ஹார்பரை உலக அளவிற்கு நவீனப்படுத்தும் வகையில், விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் ஆக மாற வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட 50% மானியத்தோடு ஆடு, கோழி, பன்றி, மாடு வளர்ப்பு என பல வாய்ப்புகளை மத்திய அரசு வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக இந்த நாடு கடந்த
எட்டு ஆண்டுகளில் வியக்கத்தக்க வளர்ச்சி பெற்று மேலும் முன்னேறி வருகிறது
என்று கூறினார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.