மணிப்பூர் வீடியோ விவகாரம்: தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தஞ்சை மத்திய மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கொடூரத்தை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கு…

தஞ்சை மத்திய மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கொடூரத்தை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட திமுக மகளிர் அணியினர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதை மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கலவரத்தை தடுக்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்த மாபெரும் ஆர்ப்பாட்டமானது நடை பெற்றது.

இந்த  ஆர்பாட்டத்தில், திமுக மாநில மகளிர் ஆலோசனை குழு உறுப்பினர் காரல்மார்க்ஸ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநில மருத்துவ அணிதுணை செயலாளரும், துணை மேயருமான அஞ்சுகம்பூபதி, மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீ.மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.