மநீமவுடன் மார்க்சிஸ்ட் கூட்டணி பேச்சுவார்த்தையா? கே.பாலகிருஷ்ணன் பதில்

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் பேச்சுவார்த்தை என்ற எண்ணமே இல்லை, என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொகுதி பங்கீட்டில், இழுபறி…

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் பேச்சுவார்த்தை என்ற எண்ணமே இல்லை, என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொகுதி பங்கீட்டில், இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், திமுக தரப்பிலிருந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு, இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை, என தெரிவித்தார்.

தாங்கள் கேட்ட இடங்களைவிட, குறைவான எண்ணிக்கையில் இடங்களை ஒதுக்குவதாக, திமுக தரப்பில் கூறுவதாகவும், கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். நாளை செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இதுகுறித்து ஆலோசனை நடத்தியதாக பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.