17 வயதுக்கு முன் திருமணம் , குழந்தைப்பேறு பெரிய விசயமே இல்லை – மனுஸ்மிரிதியை சுட்டிக்காட்டிய குஜராத் நீதிமன்றம்

17 வயதுக்கு முன் திருமணம் , குழந்தைப்பேறு பெரிய விசயமே இல்லை என  குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி மனுஸ்மிரிதியை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தைச் சார்ந்த 17வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில்…

17 வயதுக்கு முன் திருமணம் , குழந்தைப்பேறு பெரிய விசயமே இல்லை என  குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி மனுஸ்மிரிதியை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தைச் சார்ந்த 17வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டு 7மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் அவரது  பெற்றோர், அவருடைய கருவைக் கலைக்க அனுமதிகோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தற்போது சிறுமி  7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வலியுறுத்தி  பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தரப்பில் தெரிவிக்க்ப்பட்டது. இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி சமீர் தவே அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் தவே,  “நாம் தற்போது  21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வீட்டில் உள்ள  உங்கள் அம்மா அல்லது பாட்டியிடம் கேட்டுப் பாருங்கள்.  அந்த காலத்தில் எல்லாம் திருமணம் செய்ய அதிகபட்ச வயதே 14-15 வயதுதான்.

அப்படி திருமணம் நடைபெறும் பெண்களுக்கு 17 வயதிற்கு முன்பே குழந்தை பிறந்துவிடும். ஆண்களுக்கு முன்பே பெண்கள் முதிர்ச்சியடைகிறார்கள். இதனால் இது பெரிய விசயம் ஒன்றும் இல்லை.  மனுஸ்மிருதியில் இதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இதை ஒருமுறை படியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்துமாறும் மருத்துவர்கள் அந்த சிறுமிக்கு மன நல மற்றும் உடல் நல பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டார். மருத்துவர்களின் அறிக்கைகு பின்பு இது குறித்து தீர்ப்பு வழங்கப்படும் எனவும் கூறி ஜூன் 15ம் தேதி வழக்கை ஒத்திவைத்தார்.

அந்த சிறுமிக்கு 7மாதம் ஆன நிலையில் கருக்கலைப்பதால குழந்தைக்கும் அந்த பெண்ணிற்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்தும் மருத்துவர்கள் பரிசோதனை செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.