பிரிட்டனில் திருமண வயது வரம்பு அதிகரிப்பு!

பிரிட்டனின் இங்கிலாந்து மற்று வேல்ஸ் பகுதிகளில் திருமணம் செய்து கொள்வதற்கான வயது வரம்பு 18ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயது 18. ஆனால், பெற்றோர் சம்மதத்துடன் 16 வயதுடையவர்கள்…

பிரிட்டனின் இங்கிலாந்து மற்று வேல்ஸ் பகுதிகளில் திருமணம் செய்து கொள்வதற்கான வயது வரம்பு 18ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயது 18. ஆனால், பெற்றோர் சம்மதத்துடன் 16 வயதுடையவர்கள் திருமணம் செய்துகொள்ள இதுவரை அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

இதையும் படிக்க: வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு!

இந்நிலையில், தெற்காசியா மற்றும் ஐரோப்பிய சமூகங்களில் இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கட்டாய திருமணங்கள்  நடத்திய வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, திருமணம் செய்து கொள்வதற்கான திருமண வயது வரம்பு 18ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.