மனைவியின் சிலையை வீட்டில் நிறுவிய மார்க் ஜுக்கர்பெர்க் – #Viralnews

மனைவிக்காக சிலை வைத்த மார்க் ஜூக்கர்பெர்க்-க்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், தனது காதல் மனைவி பிரிசில்லா சானின் மாபெரும் சிற்பத்தை அவர்களது வீட்டின் பின்புறத்தில்…

மனைவிக்காக சிலை வைத்த மார்க் ஜூக்கர்பெர்க்-க்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், தனது காதல் மனைவி பிரிசில்லா சானின் மாபெரும் சிற்பத்தை அவர்களது வீட்டின் பின்புறத்தில் நிறுவியுள்ளார்.

40 வயதான மார்க், ஆகஸ்ட் 13 அன்று இன்ஸ்டாகிராமில் “உங்கள் மனைவியின் சிற்பங்களை உருவாக்கும் ரோமானிய மரபுகளை” மீண்டும் கொண்டு வரும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.அவை தற்போது வைரலாகி வருகிறது.இந்த சிற்பம் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்ப கலைஞர் டேனியல் அர்ஷம் என்பவரால் உருவாக்கப்பட்டது.

மேலும் அவரது கையொப்ப பாணியை பிரதிபலிக்கிறது, கட்டிடக்கலை, சிற்பம் மற்றும் செயல்திறன் கலை ஆகியவற்றின் கூறுகளை கலக்கிறது என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.