முக்கியச் செய்திகள் விளையாட்டு

வீரர்கள் காயம்: சிக்கலில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

காயம் காரணமாக இங்கிலாந்து வீரர்கள், தொடர்ந்து விலகி வருவது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி, மழை காரணமாக டிரா ஆன நிலையில் அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது.

ஜோப்ரா ஆர்ச்சர்

மூன்றாவது டெஸ்ட் போட்டி, வரும் 25ஆம் தேதி லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லேயில் தொட ங்க இருக்கிறது. இந்திய அணி, இந்தப் போட்டியையும் வெல்லும் முனைப்புடன் களமிறங்கு கிறது. இதற்கிடையே, இங்கிலாந்து வீரர்கள் சிலருக்கு ஏற்பட்டு காயங்கள் அந்த அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டூவர்ட் பிராட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் காயம் காரணமாக ஏற்கனவே அணியில் இடம்பெறவில்லை. பென் ஸ்டோக்ஸ் மனச்சோர்வு காரணமாக விடுமுறை எடுத்துள்ளார்.

மார்க் வுட்

இந்நிலையில், கடந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக விலகியுள்ளார். வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. வீரர்கள் காயம் காரணமாக தொடர்ந்து, விலகுவது அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டிலும் டெல்டா ப்ளஸ் வைரஸ்!

Ezhilarasan

அரசியலில் சசிகலா 2.0..?

Saravana Kumar

நிறம் மாறிவரும் சனி கிரகம்!

எல்.ரேணுகாதேவி