வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிந்து வரும் உடைகள் அனைவராலும் கவனம் ஈர்க்கப்பட்டு வருகிறது.
அரசு முறைப்பயணமாக கடந்த 23 ஆம் தேதி சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், முதலீடுகளை மேற்கொள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு, தமிழ்நாட்டின் வளங்கள் குறித்த கருத்துக்களுடன் கவனம் ஈர்த்தாலும், அணிந்த வண்ண உடைகளாலும் கவனம் பெற்றுள்ளார்.
ஒருவர் எங்கு சென்றாலும் முதலில் கவனம் ஈர்ப்பது உடைகள் தான். அலுவலகம், வேலை, உடற்பயிற்சி, இல்லம் என ஒவ்வொன்றிற்குமான உடைகள் உடுத்துவது நமது வழக்கமாக உள்ளது. அப்படி உடைகள் அணிவதில் கவனம் ஈர்ப்பவர்களில் ஒருவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் அரசியல் மேடைகளில் வெள்ளை நிற வேட்டி சட்டை அணிந்தாலும், உடற்பயிற்சி செய்யும் போதும், வெளி மாநில சுற்றுப்பயணங்களின் போதும் அந்த மாநிலங்களின் சூழலுக்கு ஏற்ப உடைகள் அணிவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழக்கம்.
அரசு முறைப்பயணமாக மே 23 ஆம் தேதி சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அங்கிருந்து ஜப்பான் செல்கிறார். தனது சிங்கப்பூர் பயணத்தில் தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு, தமிழ்நாட்டின் வளங்கள் குறித்த கருத்துக்களுடன் கவனம் ஈர்த்தாலும், வண்ண உடைகளாலும் கவனம் பெற்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வழக்கத்திற்கு மாறாக கட்சி வண்ணம் பதிக்காத வேட்டி, சட்டை, பிளேசர், கோட் சூட், பேண்ட் ஷர்ட், கூலிங் கிளாஸ் என தான் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு ஏற்ப உடைகள் அணிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலம் வருவதால அனைவராலும் பெரிதளவில் கவனம் ஈர்க்கப்பட்டு வருகிறார்.







