முக்கியச் செய்திகள் இந்தியா

வெள்ளி வென்ற சானுவுக்கு காவல்துறை கூடுதல் எஸ்.பி பொறுப்பு

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானு இந்தியா திரும்பினார்.

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு டெல்லி திரும்பியுள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது செய்திளார்களுக்கு பேட்டியளித்த அவர், “இந்த போட்டி தீவிர சவாலாக இருந்தது. இதற்கான தயாரிப்புகளை 2016லிருந்தே தொடங்கிவிட்டோம். ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பின்னர் நாங்கள் எங்களின் பயிற்சி முறையை மாற்றியமைத்தோம். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக நானும் எனது பயிற்சியாளரும் 5 ஆண்டுகளை அர்ப்பணித்துள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

நாட்டுக்கான முதல் பதக்கத்தை சானு வென்றதையடுத்து, அவருக்கு மணிப்பூர் காவல் துறையில் கூடுதல் எஸ்.பி (விளையாட்டு) பதவி வழங்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

49கிலோ எடைப்பிரிவில் கிளீன் அன் ஜர்க் பிரிவில் முதல் மற்றும் இரண்டாவது பிரிவில் தலா 110கி, 115கி எடையை தூக்கி அசத்தினார். இதனையடுத்து மூன்றாவது பிரிவில் 117 எடையை அவரால் வெற்றிகரமாக தூக்க முடியவில்லை. ஸ்னாட்ச் பிரிவில், 84 மற்றும் 87 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: மேலும் 2 கொள்ளையர்கள் கைது

Jayasheeba

அன்புஜோதி ஆசிரம வழக்கில் 8 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்!

Syedibrahim

கர்நாடக தேர்தல் முடிவு குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய ட்வீட்!!

Web Editor