நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து, பெருங்கால் மூலம் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான மணிமுத்தாறு அணையிலிருந்து கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தமிழக அரசு பெருங்கால் மூலம் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க அனுமதி அளித்ததையடுத்து, அணையிலிருந்து நேற்று முன்தினம் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன்மூலம் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பாங்குளம் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்து 976 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என்றும், நாளொன்றுக்கு 75 கன அடி வரை, 105 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







