மக்கள் நீதிமய்ய கட்சியின் அவரச செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நாளை நடைபெற உள்ளது.
நிர்வாக குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கான அவரச கூட்டத்திற்கான அறிவிப்பை மக்கள் நீதி மய்ய கட்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மநீம கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சில முக்கிய நிகழ்வுகள் குறித்து தெரிவிப்பதற்காக கமல்ஹாசன் தலைமையிலான அவசர நிர்வாகக்குழு, செயற்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 18ம் தேதி (நாளை) மதியம் 12 மணி அளவில் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிகழ்வில் அனைத்து நிர்வாகக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.