மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற சிஐஎஸ்எப் பாதுகாப்பு படை பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மாணிக்கம் தாகூர் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் சேவை கிடைத்தால் தான் சர்வதேச விமான நிலையமாக மாற்ற முடியும். மேலும் அதிக அளவில் சர்வதேச விமானங்களையும் இயக்க முடியும். தற்போது பாதுகாப்பு படை பணியாள்களின் எண்ணிக்கையை குறைந்திருப்பதன் காரணமாக மதுரை விமான நிலையம் இரவு 10 மணிக்கு மேல் இயங்குவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குறையை தீர்ப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிஐஎஸ்எப் பாதுகாப்பு படை பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும் (பொறுப்பு தெலுங்கானா) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்கள்.
மேலும் 2013 இல் மதுரை விமானநிலையம் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் தான் இன்று வரை கடந்த 8 ஆண்டுகளாக உள்ளது என்பதை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.








