மணிகண்டன் நடித்துள்ள “லவ்வர்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய் பீம், சில நேரங்களில் சில மனிதர்கள், சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன். சமீபத்தில் குட் நைட் திரைப்படத்தில் கதாநாயகனாக மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர் தற்போது அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள ‘லவ்வர்’ (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஸ்ரீகௌரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இத்திரைப்படம் காதலர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் பிப்.9-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.