தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் இன்று பதவியேற்பு…!

தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக எம்.பி. மாணிக்கம் தாகூர் இன்று பதவியேற்கிறார்.

தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு இவரது நியமனம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் (ஜூன்.29) தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் இன்று பதவியேற்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த வீடியோவின் படி, இன்று மாலை 4 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் கிரிஷ்சோடங்கர் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் செல்வபெருந்தகை, அழகிரி, திருநாவுகரசு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். மேலும் காங்கிரஸ் அமைச்சர்களான ராஜேஷ்குமார், விஸ்வநாதன் உள்ளிட்டோரும், கட்சி எம்.எல்.ஏக்களும் பங்கேற்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.