மங்காத்தா 2 எப்போது..? – #DirectorVenkatPrabu சொன்ன சுவாரஸ்யமான Update!

மங்காத்தா 2 படத்தின் அப்டேட் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் குமார்,  அர்ஜூன்,  த்ரிஷா நடிப்பில் வெளிவந்த திரைப்படம்…

மங்காத்தா 2 படத்தின் அப்டேட் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் குமார்,  அர்ஜூன்,  த்ரிஷா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மங்காத்தா.  அக்காலகட்டத்தில் சிறிய பின்னடைவில் இருந்த நடிகர் அஜித்துக்கு அவரின் 50-வது படமான மங்காத்தா மாபெரும் வெற்றியாக அமைந்தது.  கதாநாயகனாக அஜித்தை கொண்டாடிய ரசிகர்கள் எல்லாம் வில்லனாக கொண்டாட வைத்த படம் மங்காத்தா.

அஜித் வரும் காட்சிகள் முழுவதும் பின்னணி இசையில் யுவன்சங்கர் ராஜா அதிர வைத்திருப்பார்.  இன்றைக்கும் மங்காத்தா படத்தின் பின்னணி இசைக்கு பெரும் ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில் தற்போது அஜித் குமார் சிறுத்தை சிவா இயக்கத்தில் விடா முயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் மங்காத்தா 2 படத்தின் அப்டேட் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மங்காத்தா திரைப்படத்தை இயக்கிய வெங்கட் பிரபு தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் படத்தின் புரோமஷனில் ஈடுபட்டுள்ளார்.

மலேசியாவில் தி கோட் படத்தின் பட புரோமோஷனின் ஒரு பகுதியாக ஊடகத்திற்கு நேர்காணல் வழங்கிய வெங்கட் பிரபு தெரிவித்ததாவது..

அண்மையில் விடா முயற்சி படப்பிடிப்பு பணிகள் அஜர்பைஜானில் நடந்து முடிந்தது. அப்பொழுது வெங்கட் பிரபு, நடிகர் அஜித் குமாரை சந்தித்தேன். அங்கு நாங்கள் நிறைய விஷயத்தைப் பற்று பேசினோம். பல படங்களை பற்றி கலந்துரையாடினோம். விஜய் மற்றும் அஜித்தை ஒரே படத்தில் நடிக்க வைக்க வேண்டிய ஆசை எனக்கு இருக்கிறது என அவர்கள் இருவருக்கும் தெரியும்.

மங்காத்தா 2 திரைப்படத்தை நடிகர் அஜித்தை வைத்து தான் எடுக்க வேண்டும், இல்லையென்றான் அவரது ரசிகர்கள் என்னை அடித்து விடுவார்கள். பல விஷயங்களை பற்றி பேசினோம். அது எப்படி நடக்கும், எப்போ நடக்கும் என தெரியாது “என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.