முக்கியச் செய்திகள் இந்தியா

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு; ஐஆர்சி அமைப்பு பொறுப்பேற்பு

மங்களூரில் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு IRC என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஆட்டோ குக்கர் குண்டுவெடித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முகமது ஷாரிக் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கர்நாடகா காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முகமது ஷாரிக் தமிழகத்தில் கோவை, மதுரை, சென்னை வந்து சென்றது விசாரணையில் அம்பலமானது. யாரை சந்தித்து சென்றார் என்ற கோணங்களில் விசாரணை நீண்டு கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐஆர்சி என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தட்சினகன்னடா மாவட்டம் கத்ரியில் உள்ள மஞ்சுநாத் கோவிலை முகம்மது ஷாரிக் தகர்க்க திட்டமிட்டதாக அந்த அமைப்பு வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளது. இந்த முயற்சியில் இலக்கை அடையவில்லை என்றாலும் இதை வெற்றியாக கருதுகிறோம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

போலீசார் கட்டுப்பாட்டில் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக் புகைப்படத்துடன் இந்த கடிதம் வைரலாகி வருகிறது. இந்த கடிதம் குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், “இது போன்ற ஒரு அமைப்பை இதுவரை அறிந்தது இல்லை. உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விஷால், சுனேனா நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு

Halley Karthik

முன்னாள் காதலி வீட்டில் தகராறு; விசாரித்த சப்- இன்ஸ்பெக்டரை தாக்கிய இளைஞர்

EZHILARASAN D

கடன்கள் வசூலிப்பில் கீழ்த்தரமாக நடந்தால் கடும் நடவடிக்கை- ஆர்பிஐ ஆளுநர்

Web Editor