#Vettaiyan படத்தின் “மனசிலாயோ” பாடல் வெளியானது!

வேட்டையன் திரைப்படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் வெளியானது. ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில்,…

"Manasilayo" song from #Vettaiyan released!

வேட்டையன் திரைப்படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் வெளியானது.

ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கடந்த சில வாரங்களாக இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இத்திரைப்படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியாகியுள்ளது. முழு பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று மாலை மனசிலாயோ பாடல் வெளியானது.

இந்த பாடல் ஏஐ மூலம் பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலில் உருவாகி உள்ளது. முன்னதாக ரஜினிகாந்த் நடித்த ‘லால் சலாம்’ படத்தில் ஏஐ மூலம் மறைந்த பாடகர்களான சாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை பயன்படுத்தி இருந்தார் ஏஆர் ரஹ்மான். அதே போல், கோட் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலுக்காக மறைந்த பாடகர் பவதாரிணியின் குரல் ஏஐ உதவியுடன் பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.