செய்திகள்

மணப்பாறை : அரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

மணப்பாறை அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.  பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கோரிக்கைகளை கேட்டுள்ளார்.


திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை அடுத்த மதுரை சாலையில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல்சமத் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இதை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் இடத்தில் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். மேலும் ”நம் பள்ளி நம் பெருமை 234/77 ” என்ற ஆய்வில், பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகம், கணிணி அறை, பள்ளி கட்டிடங்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு கூறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதை தொடர்ந்து பள்ளியில் உள்ள ஆசியர்களிடம் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

பின்னர் மாணவர்கள் இடத்தில் வினாக்களை எழுப்பினார். இதனை அடுத்து 234/77 என்ற ஆய்வு பயணத் திட்டத்தின் படி 34வது ஆய்வை நடத்தி பள்ளி மேம்பாட்டிற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து சென்றுள்ளார். மேலும் இந்நிகழ்வில் உயர் கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், மற்றும் ஆசியர்கள் ஆகியோர் இந்த ஆய்வில் உடன் இருந்தனர்.

-கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காதல் கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி; ஆந்திராவில் அரங்கேறிய கொடூரம்!

Saravana

வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியே வந்தால் அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

Halley Karthik

கண்களை கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி அசத்திய யோகா பயிற்சியாளர்

Web Editor