தாய், சகோதரியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற இளைஞர்

சொந்தமாக தொழில் தொடங்க எதிர்ப்பு தெரிவித்த தாய், சகோதரியை, அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற இளைஞர், தானும் உயிரிழப்பு க்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மொட்டவிளை பகுதியை சேர்ந்தவர்…

சொந்தமாக தொழில் தொடங்க எதிர்ப்பு தெரிவித்த தாய், சகோதரியை, அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற இளைஞர், தானும் உயிரிழப்பு க்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மொட்டவிளை பகுதியை சேர்ந்தவர் அலோசியஸ் பிரின்ஸ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் ஊருக்கு வந்து திரும்ப செல்ல முடியாமல் அந்த பகுதியில் தச்சராக வேலை செய்து வநதுள்ளார் .இந்த நிலையில் சொந்தமாக பட்டறை அமைத்து தச்சு வேலை செய்வதற்காக அதற்கு தேவையான இயந்திரங்கள் வாங்கவும் கடைகள் வாடகைக்கு எடுக்கவும் முயற்சி எடுத்து வந்துள்ளார்.

இதற்கு அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மனைவியின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கேயே தங்கிய அவர், திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்து மனைவி மற்றும் குழந்தைகளை தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சமரசம் செய்வதற்காக வீட்டிற்கு வந்த தாய் ஞானச்செல்வம் மற்றும் சகோதரி சர்ச்சில் ஆகியோர் வந்துள்ளனர். கோபம் குறையாத அலோசியஸ் பிரின்ஸ் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தி, தாய்,மற்றும் சகோதரியை அரிவாளால் வெட்டி அவரும் உயிரிழப்பு க்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரின்ஸ் மனைவியின் தாயார் போலீசாருக்கு அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.