முக்கியச் செய்திகள்

தங்கையின் ஆபாசப் படத்தை அனுப்பி இளைஞரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது

இளைஞருக்கு தங்கையின் ஆபாசப் படத்தை அனுப்பி மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கள்ளிமேடு தாமரைப்புலம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து அவரின் தங்கையின் ஆபாசப் புகைப்படம் அண்மையில் வந்திருக்கிறது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர், அந்த எண்ணைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அப்போது மறுமுனையில் பேசிய நபர், என்னிடம் உன்  தங்கையின் ஆபாசப் புகைப்படம் மற்றும் அவர் குளிக்கும் வீடியோ உள்ளது. அவற்றை அழிக்க வேண்டும் என்றால் எனக்கு ரூ. 2 லட்சம் பணம் தர வேண்டும். பணம் தராவிட்டால், புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நாகை சைபர் க்ரைம் போலீஸாரிடம் கடந்த 5-ஆம் தேதி அவர் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில் நாகை சைபர் க்ரைம் சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் விசாரணையில், புகார் அளித்தவருக்கு புகைப்படம் அனுப்பி மிரட்டியது சென்னை காலடிப்பேட்டை வடக்கு மடத்தெருவைச் சேர்ந்த மகேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, நாகை போலீஸார் சென்னைக்கு சென்று மகேஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement:
SHARE

Related posts

ஐஐடியில் நடந்த தற்கொலைகளை விசாரிக்க தனி ஆணையம்: தபெதிக போராட்டம்

Ezhilarasan

கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள்; உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்

Halley Karthik

30 ஆண்டுகள் கழித்து முதல் முறை வாக்களித்த ரஜினி ரசிகர்

Saravana Kumar