‘மாமோய்… நான் திரும்ப வந்துட்டேன்’ கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய பெண் – நெட்டிசன்கள் காட்டம்

கணவன் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக, பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன்…

கணவன் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக, பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளதோடு, தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

சமீபகாலமாக தங்களது விருப்பமான நபர்களின் பெயர்களையோ அல்லது தங்களின் விருப்பமானவற்றின் உருவங்களையோ சிலர் தங்கள் உடல் மீது டாட்டூ வாக குத்திக் கொள்வது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது இன்றைய இளைஞர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் ஒரு மாடர்ன் கல்ச்சராக நமக்கு தோன்றினாலும், அந்த கால பச்சை குத்தும் முறையின் புதிய பரிமாணம் தான் இது என்பது நிதர்சனமான உண்மை.

பொதுவாக நம்முடைய பழைய படங்களில் கிராமங்களில் வசிக்கும் கதநாயகனோ, கதாநாயகியோ தங்களுடைய காதலை வெளிப்படுத்த சந்தைக்கு செல்லும்போதோ, ஊர் திருவிழாவின் போதோ தன்னுடைய முறைப்பெண்ணின் பெயரையோ அல்லது
முறை மாமனின் பெயரையோ தங்கள் கைகளில் பச்சை குத்தி கொள்வது போன்ற காட்சிகளை பல முறை அந்தகால திரைப்படங்களில் நாம் பார்த்திருக்குப்போம். இது அப்போது உருக்கமான கட்சியாக நமக்கு தோன்றி இருந்தாலும், இப்போது பார்த்தால் நமக்கு சிரிப்பு தான் வரும்.

ஆனால் இந்த காலத்தில் பெங்களூருவை சேர்ந்த மார்டன் பெண் ஒருவர், தனது கணவன் மீதான அன்பை வெளிப்படுத்த அவரது பெயரை ‛டாட்டூ’ ஆக குத்திக் கொண்ட நிகழ்வு மிகபெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அவர் பச்சை குத்தியது கைகளில் அல்ல அவரது நெற்றியில். இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா என ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இது தொடர்பான வீடியோவை பெங்களூருவை சேர்ந்த கிங் மேக்கர் டாட்டூ ஸ்டுடியோ வெளியிட்டு இருந்தது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதிலிருந்தே மில்லியன் கணக்கான பார்வையாளர்களை குவித்து வந்தாலும் நெட்டிசன்கள் தொடர்ந்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதை பார்க்கும் போது ”மாமோய்… நான் திரும்ப வந்துட்டேன் ” என்ற பழைய காட்சிகள் புதிய வரிகளாய் நம் நினைவுக்கு வந்தாலும் உண்மையான காதலை நிரூபிக்க இது போன்ற வெளித் தோற்றமான செயல்கள் தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.