‘கண்ணூர் ஸ்குவாட்’ படம் உலகளவில் இதுவரை ரூ.70 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மம்மூட்டி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் மலையாள படமான ‘கண்ணூர் ஸ்குவாட்’ திரைப்படம் உலக அளவில் ரூ.70 கோடி வசூலுடன் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிஷோர், ரோனி டேவிட் ராஜ், ஷபரீஷ் வர்மா, அஜீஸ், ஷைன் டாம் சாக்கோ, சன்னி வெயின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ‘கும்பளாங்கி நைட்ஸ்’ புகழ் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.