ராமேஸ்வரம் முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்கு குவிப்பு வழக்குப்பதிவு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வரம் முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்கு குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை…

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வரம் முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்கு குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது. 

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்கு குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.  வருமானத்திற்கு அதிகமாக 354 சதவீதம் சொத்துக்களை குவித்ததாக வழக்கு பதிவு செய்துள்ளது.

2012 முதல் 2016 ஆம் ஆண்டு கால கட்டத்தில் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் பொழுது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராமேஸ்வரம் முருகன் மற்றும் அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி,  தந்தை சின்ன பழனிசாமி,  தாய் மங்கையர்க்கரசி, மாமனார் அறுவடை நம்பி, மாமியார் ஆனந்தி உள்ளிட்ட ஆறு பேர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஏப்ரல் 2012 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு கோடியே 98 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அவருக்கு இருந்துள்ளது. இதன் பின்னர்  மார்ச் 2016 ஆம் ஆண்டு சொத்து மதிப்பை கணக்கிடும்போது ஆறு கோடியே 52 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் சொத்துக்கள் இருந்தன.

இந்த நிலையில் வரவு – செலவு கணக்குகள் ஆகியவற்றை கணக்கிட்டு பார்க்கும் பொழுது வருமானத்தை விட 3 கோடியே 89 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் சொத்துக்களை குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.