மேலும், மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனனின் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களிலும் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், மார்ட்டின் நண்பரான சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சீனி முகமது என்பவரது வீட்டிலும் 2-வது நாளாக சோதனை நடந்து வருகிறது.
ஏற்கனவே கடந்த மே மாதம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் வழக்கு ஒன்றை பதிவு செய்து, மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. தற்போது, அதன் தொடர்ச்சியாக சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றுவதற்காக மீண்டும் சோதனை நடத்துவதாக கூறப்படுகிறது.







