‘#Thalapathy69’-ல் இணைந்த மமிதா பைஜு!

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜு இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்…

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜு இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது. கோட் படத்தை தொடர்ந்து விஜய் தனது கடைசி படத்தில் இயக்குநர் வினோத்துடன் கைக்கோர்த்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் தமிழ் படம் இதுவாகும். ‘தளபதி 69’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ள, கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு நேற்றுமுதல் வெளியாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் பாபி தியோல், நடிகை பூஜா ஹெக்டே இணைந்ததாக படக்குழு அறிவித்தது. தொடர்ந்து மலையாள நடிகை மமிதா பைஜு இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.