நானிக்கு ஜோடியாகும் #KGF பட நடிகை?

‘ஹிட் 3’ படத்தில் நானிக்கு ஜோடியாக கே.ஜி.எப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்து. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நானி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான…

‘ஹிட் 3’ படத்தில் நானிக்கு ஜோடியாக கே.ஜி.எப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்து.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நானி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சூர்யாவின் சனிக்கிழமை’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டிட்டோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நானி, ‘கோர்ட்’ மற்றும் ‘ஹிட் 3’ ஆகிய 2 படங்களில் நடிக்கவுள்ளார்.

இதில் ஹிட் 3 திரைப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார். மேலும், யுனானிமஸ் புரொடக்சன் நிறுவனத்துடன் இணைந்து வால்போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி இப்படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படம் கிரைம் திரில்லர் ஜானரில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ‘ஹிட் 3’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கியது. இந்த நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கே.ஜி.எப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி இப்படத்தில் நானிக்கி ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.