30.9 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

இன்று மாலை வெளியாகும் “ஜிகர்தண்டா 2” திரைப்படத்தின் முக்கிய அப்டேட்..!

ஜிகர்தண்டா இரண்டாம் பாகம் படத்திற்கான முக்கிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் ஒரு வீடியோ கிளிப்பிங் ஒன்று வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’ஜிகர்தண்டா’. சித்தார்த் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில், லட்சுமி மேனன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

’அசால்ட் சேது’ என்ற பெயரில், ஜிகர்ண்டா படத்தில் தோன்றிய பாபி சிம்ஹாவை ரசிகர்கள் கொண்டாடினர். அந்த கதாபாத்திரத்திற்காக 2014-ம் ஆண்டு தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். சந்தோஷ் நாராயணனின் மிரட்டல் இசையில் உருவான இப்படத்தின் பிஜிஎம், இன்றும் பலரது ரிங்டோனில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு அங்கமாக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின், இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அண்மையில் வெளியிட்டார். அதன்படி ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.  ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா மோதிக்கொள்ளும் வகையில் அமைந்துள்ள காட்சிகள், ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ’ஜிகர்தண்டா டபுஸ் எக்ஸ்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading