அமெரிக்காவில் கடந்த மாதம் 18 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது 4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர். இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற உள்ளது.
இந்த நிலையில், கலிபோர்னியாவில் இன்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் எம்.ஐ. நியூயார்க் – சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூயார்க் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. சான் பிரான்சிஸ்கோ கேப்டன் மேத்திவ் ஷாட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனை தொடர்ந்து 105 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி சான் பிரான்சிஸ்கோ அணி களமிறங்கியது. இறுதியில் சான் பிரான்சிஸ்கோ அணி 16.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் எம்.ஐ. நியூயார்க்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அணி அபார வெற்றிபெற்றது. சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்திவ் ஷாட் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.




