இங்கிலாந்து மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா தேதி அறிவிப்பு

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே 26ஆம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்து, நீண்ட காலம் ராணியாக…

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே 26ஆம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்து, நீண்ட காலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தனது 96 ஆவது வயதில் மறைந்தார். இதன் காரணமாக அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா, வரும் 2023ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரச குடும்பம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மே 6, 2023 சனிக்கிழமையன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மாட்சிமிகு மன்னரின் முடிசூட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் மாட்சிமை வாய்ந்த மன்னர் மூன்றாம் சார்லஸ், ராணியாகிய அவரது மனைவியுடன் முடிசூட்டப்படுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

74 வயதாகும் மன்னர் சார்லஸ், இங்கிலாந்து வரலாற்றில், மன்னராக முடிசூடப்படும் மிக வயதான நபராவார். வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெறும் இவ்விழாவில் ராணி கமில்லா பார்க்கருடன் மன்னராக சார்லஸ் முடிசூட்டப்படுகிறார். இதன் பின்னரே அவரது அதிகாரப்பூர்வ ஆட்சி தொடங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.