மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் வசூல் எவ்வளவு?

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் 10 உப கோயில்களின் இம்மாத உண்டியல் காணிக்கையாக ரூ. 2 கோடியே 22 லட்சம் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மதுரையின் புகழுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று…

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் 10 உப கோயில்களின் இம்மாத உண்டியல் காணிக்கையாக ரூ. 2 கோடியே 22 லட்சம் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மதுரையின் புகழுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில். பல புகழ்ச்சிகளை கொண்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான உப கோயில்களுக்கு மாதந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

கோப்பு படம்

இந்நிலையில் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தும் பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில்  மாதந்தோறும் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் செயல் அலுவலர் ச.கிருஷ்ணன் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இதில், 1 கோடியே 22 இலட்சத்து 5504 ரூபாய் ரொக்க பணமும், 819 கிராம் தங்கமும், 642 கிராம் வெள்ளியும், 251 அயல் நாட்டு நோட்டுகள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.