மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர்.
மதுரை மாவட்ட காவல் துறையின் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.உத்தங்குடி முதல் வேளாண்மை கல்லூரி வரையில் நடைபெற்ற இப்போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பரிசாக 20000 – ரூபாயும், இரண்டாம் பரிசாக 10000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 5000 ரூபாயும் வழங்கப்பட்டது.மேலும் போட்டியில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் ரோபோ சங்கர், கூல் சுரேஷ், மருத்துவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் பேசிய சிறப்பு அழைப்பாளர்கள், தமிழகத்தை போதை இல்லாத மாநிலமாக உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் கூறியதாவது:
போதை இல்லாத மாவட்டமாக மதுரையை உருவாக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.மேலும் போதை பொருட்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு விரைவாக தண்டனை பெற்று தரப்படுகிறது.







