‘மெட்ராஸ்காரன்’ திரைப்பட டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

மலையாள நடிகர் ஷேன் நிகாம் நடிப்பில் உருவாகும் ‘மெட்ராஸ்காரன்’  திரைப்படத்தின் டீசர் வரும் ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்மத்’ படம் மூலம் மலையாள…

மலையாள நடிகர் ஷேன் நிகாம் நடிப்பில் உருவாகும் ‘மெட்ராஸ்காரன்’  திரைப்படத்தின் டீசர் வரும் ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்மத்’ படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம். இவரின் ‘இஷ்க்’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஆர்டிஎக்ஸ்’ படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது ‘மெட்ராஸ்காரன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை வாலி மோகன் தாஸ் இயக்குகிறார். கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை ஜெகதீஸ் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் தெலுங்கு நாயகி நிஹாரிகா கொனிடேலா இணைந்துள்ளார். இவர் நடிகர் வருண் தேஜின் தங்கை, நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் வேதா, கைதி, பார்க்கிங் ஆகிய வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டீசர் ஜூலை 24ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.