சிறந்த மருத்துவ கல்லூரி; தமிழ்நாட்டில் 2 கல்லூரிகள் சாதனை

உலகிலுள்ள டாப் 100 மருத்துவ கல்லூரிகளின் பட்டியலில் மெட்ராஸ் மருத்துவ கல்லூரி 60-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.  உலகிலுள்ள மருத்துவ கல்லூரிகளில் அளிக்கப்படும் மருத்துவ கல்வியின் தரம், மாணவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ பயிற்சி,…

உலகிலுள்ள டாப் 100 மருத்துவ கல்லூரிகளின் பட்டியலில் மெட்ராஸ் மருத்துவ கல்லூரி 60-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. 

உலகிலுள்ள மருத்துவ கல்லூரிகளில் அளிக்கப்படும் மருத்துவ கல்வியின் தரம், மாணவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ பயிற்சி, மருத்துவ உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான (2022) உலக மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை CEOWORLD இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ கல்லூரிகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. முதல் 21 இடங்களை அமெரிக்கா பெற்றுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக 22-வது இடத்தை இந்தியா பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த தரவரிசை பட்டியலின்படி அமெரிக்காவின் ஹார்வேடு மருத்துவ கல்லூரி முதல் இடத்தையும், ஜாண்ஸ் ஹாபின்ஸ் மருத்துவ பல்கலைகழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தியாவில் டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி 22-வது இடத்தையும், புனேயிலுள்ள ராணுவ மருத்துவ கல்லூரி 37-வது இடத்தையும், வேலூர் கிறிஸ்டின் மருத்துவ கல்லூரி 46-வது இடத்தையும், மெட்ராஸ் மருத்துவ கல்லூரி 60-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளன. தென் இந்தியாவில் இருந்து 2 மருத்துவ கல்லூரிகள் இந்த பட்டியலில் இடம் பெற்று சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.