மதிமுக தொண்டர்கள் வைகோ பின்னால் உள்ளனர் – திருப்பூர் மாவட்ட செயலாளர் நாகராஜ் பேட்டி

மதிமுக அவைத்தலைவர் துரைசாமிக்கு பின்னால் கட்சியினர் யாரும் இல்லை. மதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓர் அணியாக வைகோவிற்கு பின்னால் உள்ளோம். என மதிமுக திருப்பூர் மாவட்ட செயலாளர் நாகராஜ் தெரிவித்துள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்…

மதிமுக அவைத்தலைவர் துரைசாமிக்கு பின்னால் கட்சியினர் யாரும் இல்லை. மதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓர் அணியாக வைகோவிற்கு பின்னால் உள்ளோம். என மதிமுக திருப்பூர் மாவட்ட செயலாளர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்கால நலனுக்காக அதனை திராவிட
முன்னேற்றக் கழகத்துடன் இணைத்து விட வேண்டும் என மதிமுகவின் அவை தலைவர்
துரைசாமி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கடிதம் எழுதினார் .

இந்த விவகாரம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த அவர் மதிமுகவில் போலி உறுப்பினர்களை சேர்த்து உட்கட்சித் தேர்தல் நடைபெற்றதாகவும் மதிமுகவில் வைகோ கோஷ்டி,  துரை கோஷ்டி என இரண்டு கோஷ்டிகளாக பிளவுப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.நாகராஜ் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது..

மதிமுகவினர் அனைவரும் வைகோ தலைமையில் அவருக்கு பின்னால் இருக்கிறோம். பொதுச் செயலாளர் வைகோவை பயன்படுத்திக்கொண்டு  அவைத் தலைவர் குறை கூறுகிறார் . திமுக கூட்டனியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் அவைத் தலைவர் துரைசாமி. தற்போது திமுக கூட்டணியில் இணைக்க அறிவுறுத்துகிறார்.

மதிமுகவில் போலி உறுப்பினர் என குறிப்பிடுவது தவறானது. கட்சியினரை அவமரியாதை செய்வது வருத்தமளிக்கிறது .அவரது வார்டிலேயே எத்தனை உறுப்பினர் இருக்கிறார்கள் என அவருக்கு தெரியாது அவைத் தலைவர் துரைசாமிக்கு பின்னால் யாரும் இல்லை . இது தொடர்பாக காலையில் பொதுச் செயலாளர் வைகோவுடன் தொலைபேசியில் பேசினேன் வைகோ பொறுமையாக இருக்க அறிவுருத்தினர் .

துரை வைகோ வருகைக்குப் பின்பு திருப்பூர் மாவட்டத்தில் 28 அமைப்பு 48 அமைப்பானது. தொண்டர்களால் விருப்பபட்டுத்தான்  துரைவைகோவை அழைத்து வந்துள்ளோம்.அவைத் தலைவர் என்ற முறையில் துரைசாமி பொதுக்குழு கூட்டினால் மதிமுகவினர் யாரும் செல்ல மாட்டோம்”  என ஆர்.நாகராஜ் தெரிவித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.