மு.க.ஸ்டாலின் ‘தந்தையர் தின’ வாழ்த்து..!

சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆண்டு தோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ‘சர்வதேச தந்தையர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஜூன் 21) 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக தந்தையர்களின் உழைப்பு மற்றும் தியாகத்தை போற்றும் வகையில் 1900-ம் முதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “அன்பு, பொறுப்பு, தியாகம் ஆகிய பண்புகளோடு குடும்பத்தையும் குழந்தைகளையும் காக்கும் தந்தையர் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.