மெக்கானிக் ஒருவர் குறைந்த விலையில் பேட்டரி கார்களை உருவாக்கி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பெரிய பாபு சமுத்திரம் பகுதியைச் மெக்கானிக் மணிகண்டன், மோட்டர் உதவியுடன் குறைந்த விலையில் பேட்டரி கார்களை உருவாக்கி உள்ளார்.
ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கி தரும் பேட்டரி கார்கள், அப்பகுதிமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. பழைய கார்களில் உள்ள இஞ்சின்களை அகற்றி, அதில் பேட்டரிகளை மட்டும் பொருத்தி இந்த வகை கார்களை வடிவமைப்பதாக மணிகண்டன் தெரிவித்தார்.
தனக்கு தேவையான பொருளாதார உதவிகள் கிடைத்தால், குறைந்த விலையில் பேட்டரி கார்களாக மாற்றம் செய்து தரப்படும் எனவும் அவர் கூறினார்.







