பெண்ணிடம் காதலன் திருமணத்திற்குச் சம்மதம் கேட்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு ஆண் தனது காதலியிடம் தன் காதலை வெளிப்படுத்தும் விதமாக செய்த செயல் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு இணையத்தில் அனைவரின் மனதையும் கொள்ளைகொள்கிறது. அதன்படி அந்த வீடியோவில், பெண்ணின் காதலன் அந்த பெண்ணின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைத்து தனது காதலியிடம் பல குறிப்புகளைக் கொடுக்கிறார்கள்.
அதில், ‘மன்னிக்கவும், இதை நீங்கள் கைவிட்டீர்கள்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் பெண்ணின் காதலன் அவர் முன் மண்டியிட்டு “என்னை திருமணம் செய்து கொள்வாயா” என்று எழுதப்பட்ட ஒரு குறிப்பை அவளிடம் கொடுக்கிறார்.
அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் 25 பேர் முன்னிலையில் அவர் அவளிடம் திருமணத்திற்குச் சம்மதம் கேட்டதால் அப்பெண் உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார். இந்த வீடியோ ஒரு நாள் முன்பு வெளியிடப்பட்டது. பகிரப்பட்டதிலிருந்து, இது 2.6 மில்லியன் பார்வைகளைக் குவித்துள்ளது. கூடுதலாக, இந்த பகிர்வு மக்களிடமிருந்து பல விருப்பங்களையும் கருத்துகளையும் பெற்றுள்ளது.







